இந்தியா, தென்னாப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நேற்று தொடங்கியது . முதலில் களமிறங்கிய இந்திய அணி ஆட்டம் தொடக்கத்தில் முதல் முக்கிய 3 விக்கட்டுகள் இழந்து இந்திய அணி தடுமாறியது.
இதைத்தொடர்ந்து ரஹானே மற்றும் ரோஹித் இருவரும் நிதானமாக விளையாடிய அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழந்து 224 ரன்கள் எடுத்தது. இதில் ரோகித் சர்மா 117 ரன்களுடனும் , ரஹானே 83 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.
இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே ரஹானே சதம் அடித்தார். இதன்மூலம் 2016-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் ரஹானே சதம் அடித்துள்ளார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய ரோகித் ஷர்மா சிறப்பான விளையாடி இரட்டை சதம் அடித்தார்.
இதில் அவர் 212 ரன்கள் எடுத்தார்.அதில் 28 பவுண்டரி , 6 சிக்சர்கள் அடங்கும். தொடர்ந்து களமிறங்கிய சஹா 24 , ரவீந்திர ஜடேஜா 51 ரன்களுடன் வெளியேறினர். கடைசியில் இறங்கிய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 10 பந்தில் 31 ரன்கள் அடித்தார்.அதில் 5 சிக்சர் குவித்தார்.
இறுதியாக இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழந்து 497 ரன்கள் எடுத்திருந்தபோது கேப்டன் கோலி டிக்ளர் செய்தார். தென்னாபிரிக்க அணியில் ஜார்ஜ் லிண்டே 4 விக்கெட்டையும் , ரபாடா 3 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
சென்னை : கைதி திரைப்படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து…
சென்னை : நேற்று ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று (28-05-2025) காலை 05.30…
ரஷ்யா : 2022 முதல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயல்கிறது, இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது.…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான…