இந்தியா ,தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் இந்திய அணி களமிறங்கியது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் , ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே மயங்க் அகர்வால் 12 ரன் எடுத்து வெளியேற அடுத்து இறங்கிய புஜாரா டக் அவுட் ஆனார்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 12 ரன்களுடன் வெளியேறினார்.முக்கிய மூன்று விக்கெட்டை இழந்து தடுமாறி விளையாடி வந்த நிலையில் தொடக்க வீரரான ரோஹித் சர்மா, ரஹானே இருவரும் கூட்டணியில் இணைந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா சதமும் , ரஹானே அரைசதம் அடித்தனர். இந்நிலையில் போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.களத்தில் ரோகித் சர்மா 117 , ரஹானே 83 எடுத்து களத்தில் உள்ளனர். இந்திய அணி 58 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 224 ரன்கள் எடுத்து உள்ளனர்.
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…
சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…
சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3…
சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய…