இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே புனேவில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டை இழந்து 601 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது.இதைத்தொடர்ந்து இறங்கிய தென்னாபிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 275 ரன்கள் எடுத்து அனைத்து இழந்தது.
இதை தொடர்ந்து இந்திய அணி ,தென் ஆபிரிக்க அணிக்கு பாலோ ஆன் கொடுத்தது. பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 189 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியின் போது இரண்டாவது நாள் ஆட்டத்தில் தென்ஆபிரிக்கா வீரர் கேசவ் மஹாராஜுக்கு ஃபீல்டிங் செய்யும்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதை பொருட்படுத்தாமல் முதல் இன்னிங்ஸில் 9 வது விக்கெட்டுக்கு நிலைத்து நின்று 72 ரன்களை குவித்தார்.
இரண்டாவது இன்னிங்ஸிலும் முடிந்தவரை போராடி 22 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்நிலையில் போட்டிக்கு பிறகு ஸ்கேன் செய்து பார்த்த போது அவருக்கு ஏற்பட்ட காயம் 3-வது போட்டிக்குள் சரியாவதற்கு வாய்ப்பில்லை என கூறியதால் மஹாராஜ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜார்ஜ் லிண்டே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் போட்டி வருகின்ற 19-ம் தேதி ராஞ்சியில் நடைபெற உள்ளது.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…