இந்தியா , தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடைபெறுகிறது.இதில் முதல் போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் தொடங்கியது.இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் இந்திய அணி பேட்டிங் தொடங்கியது.
தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர். நேற்றைய ஆட்ட முடிவில் இந்திய அணி 59.1 ஓவர் முடிவில் விக்கெட்டை பறிகொடுக்காமல் 202 ரன்கள் அடித்து இருந்த போது மழை குறுக்கிட்டதால் நேற்றைய போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
களத்தில் ரோகித் 115 , அகர்வால் 84 ரன்களுடன் இருந்தனர். இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது.நேற்றைய ஆட்டம் போல சிறப்பாக விளையாடி வந்த அகர்வால் 212 பந்தில் 102 ரன்கள் அடித்து டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். களத்தில் தற்போது களத்தில் ரோஹித் 166 , அகர்வால் 130 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.
இந்திய அணி ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் 79 ஓவர் முடிவில் 299 ரன்கள் அடித்து உள்ளது.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…
சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில்…
நீலகிரி : உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து…
டெல்லி : வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக,…