கில் வேண்டாம் ரோஹித் கூட அவரை இறக்குங்க! கிரண் மோர் கருத்து!
இந்திய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட தயாராகி வருகிறது. இதில் முதல் டி20 கிரிக்கெட் போட்டி வரும் ஜனவரி 11-ஆம் தேதி பஞ்சாபில் உள்ள மொஹாலி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த டி20 தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுகிறார்.
போட்டி தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இரண்டு அணி வீரர்களும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையில், இந்த போட்டியில் விளையாடும் வீரர்கள் குறித்தும் பல முன்னாள் கிரிக்கெட் பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சூர்யகுமார் யாதவுக்கு அறுவை சிகிச்சை? இந்த ஐபிஎல்லில் விளையாடுவது சந்தேகம்?
அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் கிரண் மோர் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித்துடன் ஜெய்ஸ்வால் இறங்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” என்னை பொறுத்தவரையில் இந்த டி20 தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தான் ரோஹித் ஷர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக இறங்கவேண்டும்.
ஏனென்றால், இடது-வலது கலவை என்பதனை தாண்டி ஜெய்ஸ்வால் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை விளாசுவார். எனவே, அவர் தொடக்க ஆட்டக்காரராக இறங்கினால் சரியாக இருக்கும். அதே சமயம் நான் சுப்மன் கில்லை குறை சொல்லவில்லை. ஆனால் நான் டி20 வடிவத்தில் இடது மற்றும் வலது கை பேட்டிங் கலவையுடன் விளையாடினாள் நன்றாக இருக்கும் என்று தான் சொல்ல வருகிறேன். எனவே, இந்த கலவையின் படி இந்தியா இறங்கினால் நன்றாக இருக்கும் எனவும் கிரண் மோர் கூறியுள்ளார்.