INDvNZ : வீரர்களை அறிவித்த நியூசிலாந்து! இந்திய வீரர்கள் யாரெல்லாம்?
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள வீரர்கள் குறித்த விவரத்தை நியூசிலாந்து அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
பெங்களூர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்கதேசத்துக்கு எதிரான சர்வதேச டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் விளையாடி முடித்த பிறகு அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான முதல் போட்டி அக்டோபர் 16 முதல் பெங்களூரில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், போட்டி நடைபெற இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், நியூசிலாந்து அணியில் இந்த தொடரில் விளையாடவுள்ள வீரர்கள் குறித்த விவரங்களை அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே, அணியில் யார் யார் இடம்பெற்று இருக்கிறார்கள் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணி
டாம் லாதம் (கேப்டன்), டாம் ப்ளூன்டெல் (விக்கெட் கீப்பர்), மைக்கேல் பிரேஸ்வெல் (முதல் டெஸ்ட் போட்டிக்கு மட்டும்), மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, மேட் ஹென்றி, டேரில் மிட்செல், வில் ஓ ரூர்க், அஜாஸ் பட்டேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ், இஷ் சோதி (இரண்டாம் மற்றும் மூன்றாவது டெஸ்ட்களுக்கு மட்டும்), டிம் சவுத்தி, கேன் வில்லியம்சன், வில் யங்.
கண்டிக்கப்படும் இந்திய அணி
இந்தியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி வீரர்களை அறிவித்துள்ள நிலையில், இந்தியா சார்பாக விளையாடவுள்ள வீரர்கள் பற்றி இன்னும் பிசிசிஐ அறிவிக்காமல் இருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் தற்போது , விளையாட வாய்ப்பு இருக்கும் வீரர்கள் பற்றிய கணிப்பு குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, ரோஹித் சர்மா (சி), ஜெய்ஷ்வால், விராட் கோலி, ஷுப்மன் கில், பந்த், கேஎல் ராகுல், ஜடேஜா, அஷ்வின், சிராஜ், ஆகாஷ் தீப், பும்ரா, அக்சர் படேல், சர்ப்ராஸ் கான், குல்தீப் யாதவ், ஷமி ஆகியோர் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ICYMI | Our Test squad for the upcoming three-Test series against India, starting in Bengaluru next Wednesday. Watch all matches LIVE on @skysportnz 🏏 #INDvNZ #CricketNation pic.twitter.com/TzvMIpZSrH
— BLACKCAPS (@BLACKCAPS) October 8, 2024