#INDvNZ: மனீஷ் பாண்டே அரைசதம்.! நியூஸிலாந்து அணிக்கு 166 ரன்கள் வெற்றி இலக்கு.!

Default Image
  • இன்று இந்தியா- நியூஸிலாந்து இடையே நான்காவது டி 20 போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.
  • இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் அடித்தனர்.

இன்று இந்தியா- நியூஸிலாந்து இடையே நான்காவது டி 20 போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி உள்ளார்.அதனால்  கேப்டனாக  டிம் சௌத்தி செயல்படுகிறார்.

இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் டிம் சௌத்தி பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளார். இதைத்தொடர்ந்து முதலில்  இந்திய அணி பேட்டிங் செய்தது.இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல் , சஞ்சு சாம்சன் இருவரும் களமிறங்கினர். கடந்த மூன்று போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த சஞ்சு சாம்சனுக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு கிடைத்தது.

Image

இதனால் தனக்கு  கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆட்டம் தொடக்கத்திலே 08 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார்.பின்னர் இறங்கிய கேப்டன் கோலி (11) ,  ஸ்ரேயாஸ் ஐயர்(1) ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இந்திய அணி பரிதாப நிலையில் இருந்த போது தொடக்க வீரர் கே.எல் ராகுல் நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

சிறப்பாக விளையாடிய கே.எல் ராகுல் அரைசதம் அடிப்பார் என எதிர்பாராத நிலையில் 39 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.பின்னர் மத்தியில் இறங்கிய  மனீஷ் பாண்டே  நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீண்டு கொண்டு வந்தார். சிறப்பாக விளையாடிய மனீஷ் பாண்டே அரைசதம் விளாசி கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.

Image

இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் அடித்தனர். நியூஸிலாந்து அணியில் இஷ் சோதி 3 ,ஹமிஷ் பென்னட் 2 விக்கெட்டை வீழ்த்தினர்.166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூஸிலாந்து அணி களமிறங்க உள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்