#INDvNZ: சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இந்திய அணி..!
- இன்று இந்தியா- நியூஸிலாந்து இடையே நான்காவது டி 20 போட்டி வெலிங்டனில் நடைபெற்றது.
- முதலில் இறங்கிய இந்திய அணி 8 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் அடித்தனர். பின்னர் இறங்கிய நியூஸிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் அடித்ததால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.
இன்று இந்தியா- நியூஸிலாந்து இடையே நான்காவது டி 20 போட்டி வெலிங்டனில் நடைபெற்றது.இப்போட்டி சமனில் முடிந்ததால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் முதலில் இறங்கிய நியூஸிலாந்து அணி 13 ரன்கள் எடுத்தனர்.14 ரன்கள் இலக்குடன் இந்திய அணி இறங்கியது.
பின்னர் இந்திய அணியில் ராகுல் , கோலி இருவரும் இறங்கினர்.முதல் பந்திலே ராகுல் சிக்ஸர் விளாசினார்.பின்னர் அடுத்த பந்தில் பவுண்டரி விளாசினார்.மூன்றாவது பந்தில் ராகுல் அவுட் ஆனார். பின்னர் சாம்சன் இறங்கினர்.இறுதியாக இந்திய அணி 16 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் டிம் சௌத்தி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்தனர். இந்திய அணியின் இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல் , சஞ்சு சாம்சன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே 08 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார்.
பின்னர் இறங்கிய கேப்டன் கோலி (11) , ஸ்ரேயாஸ் ஐயர்(1) ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இந்திய அணி பரிதாப நிலையில் இருந்த போது தொடக்க வீரர் கே.எல் ராகுல் நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
சிறப்பாக விளையாடிய கே.எல் ராகுல் அரைசதம் அடிப்பார் என எதிர்பாராத நிலையில் 39 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.பின்னர் மத்தியில் இறங்கிய மனீஷ் பாண்டே நிதானமாக விளையாடி அரைசதம் விளாசி கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.
இறுதியாக 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் அடித்தனர். பின்னர் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய நியூஸிலாந்து அணியில் கொலின் மன்ரோ ,
டிம் சீஃபர்ட் இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
சிறப்பாக விளையாடி இருவரும் அரைசதம் அடித்தனர்.பின்னர் மத்தியில் இறங்கிய ரோஸ் டெய்லர் 24 ரன்கள் எடுக்க மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்னில் விக்கெட்டை இழந்தனர்.இறுதியாக நியூஸிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் அடித்ததால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது போட்டியும் சூப்பர் ஓவருக்கு சென்றது.அதில் நியூஸிலாந்து அணி 18 ரன்கள் அடித்தனர். பின்னர் இறங்கிய இந்திய அணி 20 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.