பாராலிம்பிக் ஆண்கள் 10 மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் எஸ்எச் 1 இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஸ்வரூப் உன்ஹல்கர் பதக்க வாய்ப்பை இழந்தார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி,இன்று காலை நடைபெற்ற பாராலிம்பிக் 10மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஸ்வரூப் உன்ஹல்கர் 615.2 மதிப்பெண்களுடன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
இந்நிலையில்,இன்று நடைபெற்ற ஆண்கள் 10 மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் எஸ்எச் 1 இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஸ்வரூப் உன்ஹல்கர் மொத்தமாக கடைசி 8 காட்சிகள் வரை முன்னணியில் இருந்தார், இறுதியில்,மொத்தமாக 203.9 புள்ளிகள் எடுத்து 4 வது இடத்தைப் பிடித்து,நூழிலையில் பதக்க வாய்ப்பை இழந்தார்.ஏனெனில்,கொரியாவின் ஜின்ஹோ பார்க் 224.5 புள்ளிகளில் வெண்கலம் வென்றார். மேலும்,இதில்,சீனா வீரர் டாங் தங்கப்பதக்கம் வென்றார்.
முன்னதாக,இன்று காலை நடைபெற்ற இன்று நடைபெற்ற மகளீர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில், இந்தியாவை சேர்ந்த வீராங்கனை அவனி லெகாரா தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார் என்பது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…