பாராலிம்பிக் 10 மீ ஏர் பிஸ்டல்;பதக்க வாய்ப்பை இழந்த இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ்..!
பாராலிம்பிக் 10 மீ ஏர் பிஸ்டல் எஸ்எச் 1 இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் பதக்க வாய்ப்பை இழந்தார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.அதன்படி, இன்றுகாலை நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா வீராங்கனை ரூபினா பிரான்சிஸ் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
இந்நிலையில்,அதன்பின்னர் நடைபெற்ற பி 2 மகளிர் 10 மீ ஏர் பிஸ்டல் எஸ்எச் 1 இறுதிப் போட்டியில் ரூபினா பிரான்சிஸ் 128.5 புள்ளிகளுடன் 7 வது இடத்தைப் பிடித்தார்.இதனால்,பதக்க வாய்ப்பை இழந்துள்ளார்.
????#ShootingParaSport Update
World Record holder Rubina Francis misses out on a medal opportunity as she finishes 7️⃣th in the P2 Women’s 10m Air Pistol SH1 final. #Tokyo2020 #Paralympics
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 31, 2021