இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான டி-20 போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது .டெல்லியில் கற்று மாசுபாடு பிரச்னையால் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது ,இந்நிலையில் பயிற்சியில் ஈடுபட்ட வங்கதேச வீரர்கள் முகத்தில் மாஸ்க் அணிந்துகொண்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.காற்று மாசுபாட்டின் காரணமாக மைதானத்தை சுற்றி வண்டியின் மூலம் தண்ணீர் பீச்சி அடிக்கப்பட்டது .
டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச முடிவு செய்தது அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் ரோஹித் ஷர்மா களமிறங்கினர் .யாரும் எதிர்பாராத நிலையில் ரோஹித் ஷர்மா 9 ரன்னில் வெளியேறினார் .
பின்னர் கே.எல் ராகுல் 15, ஸ்ரேயாஸ் ஐயர் 22 ரன்களுடன் விக்கெட்டை இழந்தனர்.நிதானமாக விளையாடிய தவான் 41 ரன்கள் அடித்து அரைசதம் அடிக்காமல் வெளியேறினார்.இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 148 ரன்கள் எடுத்தது.பங்களாதேஷ் அணிசார் பில் ஷபியுல் இஸ்லாம் ,அமினுல் இஸ்லாம் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினார்.
பங்களாதேஷ் அணி149 ரன்கள் இலக்கை துரத்தியது. இதில் லிட்டன் தாஸ் 7 ரன்களும், முஹம்மது நம் 26 ரன்களுடன், சௌமிய சர்கர் 39 ரன்கள் எடுத்து அவுட் ஆகி இருந்தனர். இதில், முஸ்தாபிர் ரகுமான் 43 பந்துகளில் அதிரடியாக விளையாடி 60 ரன்களை கடந்து ஆட்டமிழ்க்காமல் இருந்தார்.பங்களாதேஸ் அணி 3 விக்கெட் மட்டுமே இழந்து 19.3 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பங்களாதேஷ் அணி வெற்றியின் வரலாற்றை மாற்றி அமைத்துள்ளது. அதாவது இதற்கு முன்னர் இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையே நடைபெற்ற 8 போட்டியில் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்றிருந்தது.இந்நிலையில் ரோஹித் ஷர்மா தலைமையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இந்தியாவின் தொடர் வெற்றியை முறியடித்துள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…