சுதந்திரத்துக்கு பின் ஒலிம்பிக்கில் இந்தியா படைத்த சாதனை.. திரும்பி பார்க்க வைக்கும் வரலாறு!

Default Image

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 7 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை.

ஒலிம்பிக் ஓர் பார்வை:

ஒரு விளையாட்டு வீரருக்கு ஒலிம்பிக் போட்டி என்பது மிகவும் முக்கியத்துவம் வந்ததாக கருதப்படுகிறது. உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் விளையாட்டுப் போட்டிகள் என்றால் ஒலிம்பிக்தான். உலக நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே வீரர்களின் லட்சியம். ஒலிம்பிக் போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். 33 விளையாட்டுகளுக்கு 339 பதக்கங்கள் வழங்கப்பட இருக்கின்றன. மிகப் பிரம்மாண்டமாகவும் அதிக நாடுகள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டியாவும் இருக்கும் ஒலிம்பிக் போட்டியின் வயது சுமார் 2,800 ஆண்டுகள்.

கி.மு. எட்டாம் நூற்றாண்டில் ஆரம்பித்த ஒலிம்பிக்:

olympic

பழங்கால கிரேக்கத்தில் கி.மு. எட்டாம் நூற்றாண்டில் ஆரம்பித்த ஒலிம்பிக் போட்டி, கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை விளையாடப்பட்டு வந்தது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பியா என்கிற இடத்தில் ஜீயஸ் கடவுளுக்கு மரியாதை செய்யும் விதத்தில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. இசை, சொற்பொழிவு, நாடகம் போன்றவற்றிலும் போட்டிகள் நடைபெற்றன. ஆண்கள் மட்டுமே போட்டிகளில் அனுமதிக்கப்பட்டனர். ஒலிம்பிக் போட்டிகளில் போர்க்குணமிக்க வீரர்கள் பங்கேற்க ஆரம்பித்த பிறகு, விளையாட்டுகளில் சுவாரசியம் கூடியது.

ஒலிம்பிக்கில் பெண்களுக்கு அனுமதி:

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வந்த ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டன. நாடுகளிடையே பதக்கம் பெறுவதில் போட்டிகளும் அதிகரித்தன. 1900-ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பெண்களும் அனுமதிக்கப்பட்டனர். இதன்பிறகு ஒலிம்பிக்கில் ஆண்கள், பெண்கள் ஆகியோர் பதக்கங்களை வென்று குவித்து தங்கள் நாட்டுக்கு பெருமை சேர்ந்தனர். இப்படிப்பட்ட ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சுதந்திரத்துக்கு பின் எப்போது பங்கேற்றது.

ஒலிம்பிக் போட்டியில் முதன் முதலில் இந்திய தேசிய கீதம்:

1947-இல் சுதந்திர பெற்ற இந்தியா, இங்கிலாந்தின் லண்டனில் உள்ள வெம்ப்லி பூங்காவில் 1948-ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக்கில் பங்கேற்றது. இதில், 79 போட்டியாளர்கள், அனைவரும் ஆண்களும், 10 விளையாட்டுகளில் 39 பிரிவுகளில் பங்கேற்றனர். இந்தியா சுதந்திர நாடாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றது இதுவே முதல் முறை. இதில், ஃபீல்டு ஹாக்கி அணி இந்தியாவுக்கு தங்க பதக்கத்தை பெற்றுக் கொடுத்தது. சுதந்திரத்துக்கு முன்பே இந்தியா ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு பதக்கம் வென்றிருந்தாலும், 1948-ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில்தான் முதன் முதலில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

1947hocckey

நாட்டின் முதல் தங்கப் பதக்கம்:

இந்திய ஃபீல்டு ஹாக்கி அணி 1948 கோடைகால ஒலிம்பிக்கில் பிரிட்டிஷ் அணியை தோற்கடித்து நாட்டின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, ஒலிம்பிக்கில் பெற்ற முதல் தங்கப் பதக்கம் இதுவாகும். 1952 கோடைகால ஒலிம்பிக்கில் மல்யுத்த வீரர் கே.டி. ஜாதவ் சுதந்திர இந்தியாவுக்கான முதல் தனிநபர் பதக்கத்தை வென்றார். இந்திய பீல்ட் ஹாக்கி அணி 1956 கோடைகால ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து ஆறாவது தொடர் பட்டத்தை வென்றதன் மூலம் தங்கள் ஆதிக்கத்தைத் தொடர்ந்தது. அப்போது இந்திய பிரதமராக பிரதமர் ஜவஹர்லால் நேரு இருந்தார்.

1952 Helsinki

இந்திய அணி தொடர்ந்து 6 முறை பட்டம் வென்றதே ஒலிம்பிக் சாதனையாக இருந்தது. இந்த சாதனையை பின்னர் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து அணி மட்டுமே முறியடித்தது. அடுத்தடுத்த ஆண்டிகள் இந்திய ஹாக்கி அணி பதக்கங்களை வெல்ல, 1976 கோடைகால ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கமின்றி திரும்பியது. இது 1924 க்குப் பிறகு முதல் முறையாகும். இதன்பின் இந்திய ஹாக்கி அணி 1980 கோடைகால ஒலிம்பிக்கில் 8-வது ஒலிம்பிக் தங்கத்தை வென்றது சாதனை படைத்தது.

ஒலிம்பிக்கில் முதல்முறையாக தனிநபர் பதக்கம்:

1996-ஆம் ஆண்டு அட்லாண்டாவில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக்கில், இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். 1952க்குப் பிறகு ஒலிம்பிக்கில் முதல்முறையாக தனிநபர் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். இதன்பிறகு ஒலிம்பிக்கில் இந்திய வீரர்களின் தனிநபர் பதக்கம் தொடங்கிய நிலையில், சாதனைகள் படைக்க தொடங்கின.

Leander Paes

இந்திய பெண் வென்ற முதல் பதக்கம்:

2000-ஆம் ஆண்டு நடைபெற்ற சிட்னி ஒலிம்பிக் போட்டில் பெண்களுக்கான 69 கிலோ பளு தூக்குதல் பிரிவில் கர்ணம் மல்லேஸ்வரி வெண்கலப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக்கில் இந்திய பெண் ஒருவர் வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.

Karnam Malleswari

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்தியர்:

2008-ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில், ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டிகளில் தனிநபர் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். குத்துச்சண்டையில் மிடில்வெயிட் பிரிவில் வெண்கலப் பதக்கத்துடன் நாட்டிற்கு முதல் பதக்கத்தை விஜேந்தர் சிங் பெற்று தந்தார். இந்தியா 3 பதக்கங்கள் வென்றதே அந்த ஆண்டு வரை சிறப்பாக இருந்தது. வரலாற்றில் மூன்றாவது சிறந்த செயல்திறனாக சாதனையும் படைத்தது.

புதிய சாதனை படைத்த இந்தியா:

2012 ஒலிம்பிக்கில், 83 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய அணி, மொத்தம் ஆறு பதக்கங்களுடன் நாட்டிற்கு ஒரு புதிய சிறந்த சாதனையைப் படைத்தது. இதில், மல்யுத்த வீரர் சுஷில் குமார் சுதந்திரத்திற்குப் பிறகு பல தனிநபர் ஒலிம்பிக் பதக்கங்களை (2008 கோடைகால ஒலிம்பிக்கில் வெண்கலம் மற்றும் 2012 கோடைகால ஒலிம்பிக்கில் வெள்ளி) பெற்ற முதல் இந்தியரானார். இதுபோன்று மகளிர் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால் பாட்மிண்டனில் வெண்கலப் பதக்கம் வென்றார். பேட்மிண்டனில் நாட்டின் முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்றார்.

2012

குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், பெண்கள் ஃப்ளைவெயிட் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் குத்துச்சண்டையில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார். ஆண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் நட்சத்திர துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங் வெண்கலம் வென்றார். ஆடவருக்கான 25 மீ ரேபிட் ஃபயர் பிஸ்டல் போட்டியில் விஜய் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதுவே இந்தியாவின் சிறந்த செயல்திறனாக இருந்தது.

மல்யுத்தப் போட்டியில் முதல் பெண் பதக்கம்: 

2016 ஒலிம்பிக்கில், 118 விளையாட்டு வீரர்கள் பங்கேற்று சாதனை படைத்தனர். இதில், பெண்களுக்கான  58 கிலோ மல்யுத்தப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக்கில் மல்யுத்தப் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை சாக்ஷி மாலிக் பெற்றார். பெண்கள் ஒற்றையர் பாட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி மற்றும் இளைய ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

2016

ஒலிம்பிக்கின் தொடக்க நாளில் இந்தியா பதக்கம்:

2020 கோடைகால ஒலிம்பிக் போட்டி, கொரோனா காரணமாக  2021 இல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த 32வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இந்தியா சார்பில் 124 விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டு புதிய சாதனை படைத்தனர். இதில், முதல் நாளில் 49 கிலோ பளு தூக்குதல் பெண்கள் பிரிவில் சாய்கோம் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார். இது ஒலிம்பிக்கின் தொடக்க நாளில் இந்தியா பதக்கம் வென்றது இதுவே முதல் முறை.

பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் சீனாவின் ஹீ பிங்ஜியாவோவை நேர் செட்டில் தோற்கடித்து, இரண்டு தனிநபர் ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.

தங்க நாயகன் நீரஜ் சோப்ரா:

neerarjchopra

2021 இல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று ஒலிம்பிக் சாதனை படைத்தார். இதன் மூலம் ஒலிம்பிக் தடகளத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். அந்தாண்டு ஒலிம்பிக்கில் ஒரே தங்க பதக்கம் பெற்று கொடுத்த தங்க மகனானார். மேலும், தனிநபர் ஒலிம்பிக் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். இந்த ஒலிம்பிக் போட்டியில் அதிகபட்சமாக 87.58 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார்.

ஒலிம்பிக் வரலாற்றில் 7 பதக்கங்கள் வென்று இந்தியா சாதனை:

tokyo

ஆடவர் பீல்டு ஹாக்கியில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது. இந்த பதக்கம் 41 வருட இடைவெளிக்குப் பிறகு கிடைத்தது. மல்யுத்தப் போட்டிகளில் ரவிக்குமார் தஹியா வெள்ளிப் பதக்கமும், பஜ்ரங் புனியா வெண்கலப் பதக்கமும் வென்றனர். மகளிர் குத்துச்சண்டை போட்டியில் ஒலிம்பிக்கில் அறிமுக வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் வெண்கலம் வென்றார். குத்துச்சண்டையில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற இரண்டாவது பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.

2021-ல் டோக்கியோ ஒலிம்பிக் வரலாற்றில் 7 பதக்கங்கள் வென்று இந்தியா புதிய சாதனை படைத்தது. அதுமட்டுமில்லாமல், ஒவ்வொரு முறையும் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்களின் ஆதிக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. புது புது சாதனைகளை படைத்தது வருகின்றனர். வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பதக்கங்கள் அதிகரித்து உலக சாதனை படைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. எனவே நாட்டிற்கு பெருமை சேர்ந்த அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala
Congress MPs - BJP MPs Protest in Parliament
Protest against Amit shah speech