ஒலிம்பிக் மல்யுத்தம்:வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்தியாவின் ரவிக் குமார்..!
ஒலிம்பிக் மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிக் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் மல்யுத்தம் காலிறுதிப் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிக் குமார் தஹியா ,பல்கேரியாவின் வாலண்டினோ வாங்கேலோவை 14-4 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
வலியை பொறுத்துக்கொண்ட நம்பிக்கை வீரர்:
அதனைத் தொடர்து நடைபெற்ற 57 கிலோ ஃப்ரீஸ்டைல் அரையிறுதியில் இந்தியாவின் ரவிக் குமார் தஹியா,கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனாயேவை எதிர்கொண்டார்.
இப்போட்டியின்போது,ரவி கடைசி நிமிடங்களில் கஜகஸ்தான் வீரரை தரையில் சாய்த்தார்,இதனால்,அவரது கிடுக்குப் பிடியிலிருந்து தப்ப கஜகஸ்தான் வீரர் ரவியின் கையை கடுமையாக கடித்துள்ளார். இதனால்,கடுமையான வலி ஏற்பட்டும், வெற்றியைக் கைப்பற்றுவதற்காக ரவி பொறுத்துக்கொண்டார். இருப்பினும், இப்போட்டியின் இறுதியில்,9-2 என்ற கணக்கில் நூரிஸ்லாமை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
சாதனை:
இந்நிலையில்,இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் ரவி குமார்,ரஷ்ய வீரர் மற்றும் உலக சாம்பியனான ஜாகுர் உகுவேவை எதிர்கொண்டார்.மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் இறுதியில் ரவிக் குமார் 4-7 என்ற கணக்கில்,ரஷ்ய வீரரிடம் தோல்வியுற்றார்.இருப்பினும்,இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.
???????? wrestler Ravi Dahiya will play for #Gold at #Tokyo2020 in some time, get ready to cheer for him.
Continue sending in your #Cheer4India messages to encourage him.#Wrestling #Olympics pic.twitter.com/Ns5UxfyoVW
— SAIMedia (@Media_SAI) August 5, 2021
முன்னதாக,பளுதூக்குதலில் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றிருந்த நிலையில்,தற்போது 2 வது வெள்ளிப்பதக்கத்தை ரவிக் குமார் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
மேலும்,41 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று காலை நடைபெற்ற இந்திய ஆடவர் அணி ஹாக்கி போட்டியில் முதல் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தது.ஏற்கனவே,ஒலிம்பிக் பேட்மிண்டனில் பிவி சிந்து வெண்கலப்பதக்கம் வென்றார்.குத்துச்சண்டையில் லவ்லினா வெண்கலம் வென்றார்.இந்நிலையில்,இந்தியாவுக்கு 5 வது பதக்கத்தை ரவிக் குமார் பெற்று கொடுத்து சாதனை புரிந்துள்ளார்.