ஒலிம்பிக் மல்யுத்தம் : இந்திய வீரர்கள் அதிரடி – அரையிறுதிக்கு தகுதி ..!
டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் ரவிக்குமார்,தீபக் புனியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்கள்.
இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் மல்யுத்தம் காலிறுதிப் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தஹியா ,பல்கேரியாவின் வாலண்டினோ வாங்கேலோவை எதிர்கொண்டார். இப்போட்டியின் தொடக்கம் முதலே ரவிக்குமார் முன்னிலை வகித்து வந்தார்.அதன்படி,போட்டியின் இறுதியில்,ரவிக்குமார் 14-4 என்ற கணக்கில் பல்கேரிய வீரரை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
INTO THE SEMIS ????
Ravi Kumar wins 14-4 against Valentino Vangelov of #BUL by technical superiority in the 57kg category of men’s #wrestling ????#Tokyo2020 #StrongerTogether #UnitedByEmotion #IND
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 4, 2021
அதேபோல,மல்யுத்தம் காலிறுதிப் போட்டியில் 86 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் தீபக் புனியா,சீன வீரர் லின் சூசனை 6-3 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
#IND‘s Deepak Punia stamped his authority over Zushen Lin of #CHN, winning 6-3 by points to make his way into the men’s 86kg semi-final ????????#Tokyo2020 | #StrongerTogether | #UnitedByEmotion | #Wrestling
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 4, 2021
இவர் முன்னதாக இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நைஜீரிய வீரர் அகியோமோரை 12-1 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம்,இருவரும் ஒலிம்பிக் பதக்கத்தை பெற்று தரும் நம்பிக்கையை தற்போது இந்தியாவுக்கு அளித்துள்ளனர்.