ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் லவ்லினா வெற்றி பெற்றுள்ளார்.
இன்று நடைபெற்ற ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன்,ஜெர்மனி வீராங்கனை நாடின் அபெட்ஷை எதிர்கொண்டார்.
முன்னிலை:
ஆட்டத்தின் தொடக்கம் முதலே லவ்லினா தனது திறமையை வெளிப்படுத்தி,முதல் பாதியில் 10 – 9 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார்.இதனையடுத்து, இரண்டாவது பாதியிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய வீராங்கனை லவ்லினா,மீண்டும் 10 – 9 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார்.
வெற்றி:
இறுதியில்,இந்திய வீராங்கனை லவ்லினா 3-2 என்ற கணக்கில்,ஜெர்மனி வீராங்கனை நாடின் அபெட்ஷை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். இதனால்,காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.எனவே,இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம் கிடைக்க வாய்ப்பு இருக்கும் என நம்பிக்கை எழுந்துள்ளது.போர்கோஹெய்ன் இரண்டு முறை உலக மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றவர்.
அதேபோல,35 வயதான அபெட்ஷ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டிக்கு தகுதி பெற்ற முதல் ஜெர்மன் வீராங்கனை மற்றும் இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்றவர் மற்றும் முன்னாள் ஐரோப்பிய சாம்பியன் ஆவார்.
இதற்கு முன்னதாக,இன்று நடைபெற்ற ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வார தொடக்க நாளான இன்று (மார்ச் 17) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.…
சென்னை : அண்மையில் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
சென்னை : சில தினங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில்…
விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்…