2023 பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 16வது தங்கம்.! 

Para Asian Games 2023

சீனாவில் நடைபெற்று வரும் 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய பாரா விளையாட்டு போட்டியில், ஆடவருக்கான ஷாட் புட் F46 விளையாட்டு (குண்டெறிதல்) போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட வீரர் சச்சின் சர்ஜேராவ் கிலாரி தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

இதன் மூலம் 2023 பாரா ஆசிய போட்டியில் 16வது தங்கத்தை இந்தியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சச்சின் சர்ஜேராவ் கிலாரி 16.03 மீட்டர் தூரம் குண்டெறிந்து தங்கப் பதக்கம் வென்றது மட்டுமின்றி, ஆசிய பாரா விளையாட்டில் அதிக தூரம் எறிந்து புதிய சாதனையையும் படைத்ததார்.

ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள்: ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்!

அதே போல ஷாட் புட் வீரர் ரோஹித் குமார் 14.56 மீட்டர் தூரம் குண்டெறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார். இதுவரையில், இந்தியா, 16 தங்க பதக்கங்கள், 20 வெள்ளி பதக்கங்கள், 33 வெண்கல பதக்கங்கள் என மொத்தமாக 69 பதக்கங்களை வென்று அசதியுள்ளது.

சீனாவில் ஹான்சோ நகரில் நடைபெற்று வரும் 2023 பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய சார்பில் 303 தடகள வீரர்கள் விளையாடி வருகின்றனர். இதில் 191 ஆண்கள் மற்றும் 112 பெண்கள் ஆவார்.

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், இந்தியா சார்பில் 190 விளையாட்டு வீரர்களை அனுப்பி 15 தங்கம் உட்பட 72 பதக்கங்களை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்