டோக்கியோ குத்துச்சண்டை:காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர்…!

Default Image

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் சூப்பர் ஹெவிவெயிட் குத்துச்சண்டை வீரர் சதீஷ் குமார் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை சூப்பர் ஹெவி வெயிட் போட்டியின் 91 கிலோவுக்கு மேல் உள்ள எடை பிரிவின், 16 வது சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றன.

இப்போட்டியில் இந்திய வீரர் சதீஷ் குமார் ஜமைக்காவின் ரிகார்டோ பிரௌனை எதிர்கொண்டார்.முதல் ரவுண்டில் ஐந்து நடுவர்களிடமும் சதீஷ் குமார் தலா 10 புள்ளிகள் பெற்றார்.இதனையடுத்து,2-வது மற்றும் 3-வது சுற்றுகளில் 3-வது நடுவர் தலா 9 புள்ளிகள் வழங்கினார்.

இறுதியில்,சதீஷ் குமார் 4-1 (30-27, 30-27, 28-29, 30-27, 30-26) என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.இதனால்,ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று நடைபெறும் காலிறுதியில் உஸ்பெகிஸ்தான் வீரர் பகோதிர் ஜாலோலோவை எதிர்கொள்ளவுள்ளார்.

முதல் குத்துச்சண்டை வீரர்:

31 வயதான ஜமைக்காவின் பிரௌன், 1996 முதல் தனது நாட்டிலிருந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் குத்துச்சண்டை வீரர் ஆவார்.

அதேபோல,சூப்பர் ஹெவிவெயிட் பிரிவில் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய குத்துச்சண்டை வீரர் சதீஸ் குமார் ஆவார்.இவர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் பதக்க வாய்ப்பை மிகக் குறைந்த புள்ளிகளில் இழந்து விட்டார்.இருப்பினும்,டோக்கியோ 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் தகுதிப் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தை பெற்றார்.

விருது:

சதீஸ் குமாருக்கு,2018 ஆம் ஆண்டு மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி கௌரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்