இந்தியாவின் மிகப்பெரிய ஹாக்கி மைதானம் மற்றும் விமான நிலையம் ரூர்கேலா வில் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக ஒடிசாவின் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஹாக்கி உலகக்கோப்பைதொடரில் போட்டி நடைபெறும் மைதானங்களில் ஒடிசா மாநிலத்தின் ரூர்கேலாவும் இடம்பெற்றுள்ளது. அதனை முன்னிட்டு அதற்கு முன்னதாக ரூர்கேலாவில் இந்தியாவின் மிகபெரிய ஹாக்கி மைதானம் மற்றும் விமான நிலையமும் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் ஒடிசாவின் தலைமைச் செயலாளர் மஹபத்ரா தெரிவித்தார்.
இது குறித்து முதலமைச்சரின் செயலாளர் வி.கே.பாண்டியனுடன், மஹபத்ரா இரண்டு இடங்களையும் பார்வையிட்ட பிறகு அவர் கூறியதாவது, விமான நிலையம் இன்னும் சில தினங்களில் செயல்படத்துவங்கும் என்றும் மைதானத்தில் டிச-24 முதல் பயிற்சிப் போட்டிகள் தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13இல் தொடங்கும் ஹாக்கி உலககோப்பைக்கு முன்னதாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள இந்த மைதானம் 20,000 இருக்கைகளுடன் இந்தியாவில் மிகபெரிய மைதானமாக உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் அரசு மருத்துவராக பணியாற்றி வரும்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை இன்று காலை…
சென்னை : கிண்டி பகுதியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று காலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு…
சென்னை : பிரபல எழுத்தாளர் ராஜ் கௌதமன் (74) காலமானார். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் கலாசார மற்றும் இலக்கிய…
வயநாடு : இன்று (நவம்பர் 13) ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலோடு, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி-25ம் தேதி அதிபராக பதவியேற்கவுள்ளார்.…