டோக்கியோ ஒலிம்பிக்: விமானத்தை தவறவிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்…!

Published by
Edison

இந்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகாட்  பிராங்க்ஃபர்ட்டில் இருந்து டோக்கியோவிற்கு செல்லும் விமானத்தை தவறவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் நட்சத்திர மல்யுத்த வீரரும், இந்தியாவின் மிகப்பெரிய பதக்க நம்பிக்கை வீராங்கனைகளில் ஒருவருமான  வினேஷ் போகட்,ஒலிம்பிக் விளையாட்டுக்கு முன்னதாக தனது பயிற்சியாளர் வோலர் அகோஸுடன் ஹங்கேரியில் பயிற்சி பெற்று வருகிறார்.நேற்று இரவு டோக்கியோவை அடைய இருந்தார்.ஆனால் டோக்கியோவுக்கு செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு அவர் பிராங்ஃபர்ட் விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இதனால்,வினேஷ் போகட் நேற்று பிராங்பஃர்ட்டிலிருந்து டோக்கியோவுக்கு செல்லும் விமானத்தைத் தவறவிட்டார்.பி.டி.ஐ படி, அவர் தனது ஐரோப்பிய ஒன்றிய (ஈ.யூ) விசாவின் மூலம் ஹங்கேரியில் ஒரு நாள் அதிகமாக தங்கியுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும்,இது தொடர்பாக,இந்தியன் ஒலிம்பிக் அசோசியேஷன் (ஐஓஏ)  அதிகாரி கூறுகையில்:

“இது ஏதோ ஒரு நோக்கத்திற்காக செய்யப்படவில்லை.அவரது ஷெங்கன் விசாவின் படி 90 நாட்களுக்கு பதிலாக, அவர் புடாபெஸ்டில் இருந்து பிராங்பேர்ட்டில் தரையிறங்கிய பின்னர் 91 நாட்கள் அவர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தார் என்று கணக்கிடப்பட்டது.இந்த விஷயத்தை இந்திய விளையாட்டு ஆணையம் (எஸ்.ஏ.ஐ) விரைவாக எடுத்துக் கொண்டது.மேலும்,பிராங்பேர்ட்டில் உள்ள இந்திய துணைத் தூதரகம் விமான நிலையத்தை அடைந்து சிக்கலை சரி செய்தது. இதனால், வினேஷ் நாளை டோக்கியோவில் இருப்பார்”,என்று தெரிவித்தார்.

அதன்படி,வினேஷ் போகாட் தற்போது டோக்கியோவில் தரையிறங்கவுள்ளார்.இதனையடுத்து,டோக்கியோ ஒலிம்பிக் ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் 53 கிலோ பிரிவில் பங்கேற்கவுள்ளார்.

26 வயதான,வினேஷ் போகட் 2018 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் ஆவார் மற்றும் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Edison

Recent Posts

ஹெலிகாப்டர் செல்ல அனுமதி மறுப்பு! 1 மணி நேரம் காத்திருந்த ராகுல் காந்தி!

ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…

13 mins ago

கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி?. எளிமையான செய்முறை விளக்கங்கள்..

சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…

38 mins ago

300 கோடி வசூலை நெருங்கும் அமரன்…எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…

45 mins ago

“பேச்சுவார்த்தை நடத்துங்கள்.!” ஜெயம்ரவி விவகாரத்து வழக்கில் நீதிமன்றம் ஆணை.!

சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…

2 hours ago

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கிண்டி மருத்துவமனை! இளைஞர் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டம்!

சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…

2 hours ago

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘மைக் டைசன்’! பரபரப்பான குத்துச்சண்டை ..யாருடன்? எப்போது?

டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…

2 hours ago