ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்திய மல்யுத்த வீரர்.!

Default Image

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மல்யுத்த வீரர் அமித் பங்கால் தகுதி பெற்றார். இதுவரை 2 வீராங்கனைகள் உள்பட 6 இந்தியர்கள் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளனர். ஹரியானா மாநிலம் மைனா என்ற கிராமத்தை சேர்ந்த 23 வயதான அமித் பங்காலின். இவரது சகோதரர் அஜய் மூலம்தான் குத்துச்சண்டை அமித்துக்கு பரீட்சையமானது. இதையடுத்து குத்துசண்டை அவரது அண்ணனின் கனவு என்று கூறுகிறார். 2016-ல் ரியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற உஸ்பெஸ்கிஸ்தானின் ஹசன்பாய் துஸ்மாடோவை வீழ்த்தி கவனம் பெற்றார். பல முன்னணி வீரர்களுடன் சிறப்பாக விளையாடியுள்ளார்.

இதனிடையே ஒலிம்பிக்கிலிருந்து 49 கிலோ பிரிவை நீக்கியதையடுத்து தற்போது 52 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்டு விளையாடி வருகிறார். கடந்த ஒரு வருடங்களில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. நான் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும். ஆனால் 49 கிலோ எடைப்பிரிவை ஒலிம்பிக்கில் இருந்து நீக்கிய காரணத்தால் தற்போது 52 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கவுள்ளேன் என்று தெரிவித்திருந்த நிலையில், ஜூலை  24ம் ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்