19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய மகளிர் கால்பந்து அணி அறிவிப்பு.!
சீனாவின் ஹாங்சோவில் நடைபெறும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான 22 பேர் கொண்ட இந்திய மகளிர் கால்பந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் சௌமியா குகுலோத், இந்துமதி கதிரேசன், சந்தியா ரங்கநாதன் என தமிழ்நாட்டை சேர்ந்த 3 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
மேலும், ஸ்ரேயா ஹூடா, சௌமியா நாராயணசாமி, பாந்தோய் சானு, ஆஷாலதா தேவி, ஸ்வீட்டி தேவி, ரிது ராணி, தலிமா சிப்பர், அஸ்தம் ஓரான், சஞ்சு, ரஞ்சனா சானு, சங்கீதா பாஸ்போர், பிரியங்கா தேவி, அஞ்சு தமாங், டாங்மேய் கிரேஸ், பியாரி சாக்சா, ஜோதி, ரேணு, பாலா தேவி, மனிஷா, தாமஸ் டென்னர்பி ஆகியோர் அணியில் உள்ளனர்.
இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியானது செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 6 வரை நடைபெறுகிறது. இதற்கிடையில், இந்திய மகளிர் அணி இதற்கு முன் இரண்டு முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.