பாரிஸ் ஒலிம்பிக் : பிரான்ஸின் பாரிஸ் நகரில் உள்ள லெஸ் இன்வாலிடெஸ் கார்டனில் வில்வித்தை போட்டிக்கான ரேங்கிங் சுற்று தொடங்கியுள்ளது.
உலகநாடுகள் பங்கேற்று நாளை தொடங்கவிருக்கும் மாபெரும் விளையாட்டு தொடரில் நடைபெறும் வில்வித்தை போட்டி தகுதி சுற்று நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் தனிநபர் ரேங்கிங் சுற்றில் இந்திய அணி சார்பாக கலந்து கொண்ட பஜன் கவுர் 11 இடமும், அங்கிதா பகத் 22 இடமும் மற்றும் தீபிகா குமாரி 23வது இடமும் பிடித்துள்ளனர்.
இதனால், புள்ளிகளின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக இந்திய மகளிர் அணி 4-ஆம் இடம் பிடித்து காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற்று அசத்தி இருக்கிறது. நடைபெற்ற இந்த வில்வித்தை போட்டியில், மொத்தம் 2 பாதிகளாக தனிநபர் ரேங்கிங் சுற்றில் ஒவ்வொரு போட்டியாளரும் சுமார் 72 முறை அம்புகளை எய்தனர். இதில் ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் போட்டித் தரவரிசை எண் வழங்கப்பட்டது.
அதன்படி மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா பகத் 666 புள்ளிகளில் 11-ம் இடம் பிடித்தார், அவரை தொடர்ந்து பஜன் கவுர் 659 ஸ்கோருடன் 22-ம் இடம் பிடித்தார், தீபிகா குமாரி 658 ஸ்கோருடன் 23-ம் இடம் பிடித்தார். இதனால் தனிநபர் ரேங்கிங் சுற்றில் இந்திய அணி ஒட்டு மொத்தமாக பெற்ற 1983 புள்ளிகள் பெற்றுள்ளது.
இதன் காரணமாக மொத்தமாக புள்ளிப்பட்டியல் ரேகிங் அடிப்படையில் 4-ஆம் இடம் பிடித்து அசத்தியது, இதனால் நேரடியாக காலிறுதிக்கு சுற்றுக்கும் தகுதி அடைந்துள்ளது. மேலும், கொரியா, சீனா மற்றும் மெக்சிக்கோ ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களை மகளிர் பிரிவில் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வில்வித்தையில் தனி நபருக்கான ரவுண்ட் ஆஃப் சுற்று வரும் ஜூலை 30-ம் தேதி முதல் தொடங்குகிறது. அதே நேரம் மகளிர் அணிக்கான நாக்-அவுட் போட்டி 28-ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த இரண்டிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக காலிறுதி சுற்றுக்கு முன்னேறுவார்கள் அதிலும் 5 முதல் 12 வரையிலான இடங்களை பிடிக்கும் அணிகள் ரவுண்ட் ஆஃப் 16-ல் சுற்றில் விளையாடி தகுதி பெறுவார்கள்.
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…