பாராட்டுக்கள் : பளுதூக்குதலில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை…!
உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை ஹர்ஷதா சரத்.
உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டி கிரீஸில் நடைபெற்றது. இந்த போட்டியில், இந்தியாவின் ஹர்ஷதா சரத் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
கிரீஸில் நடந்த போட்டியில் 45 கிலோ எடை பிரிவில் 153 கிலோ எடையை தூக்கி 16 வயது ஹர்ஷதா சாதனை படைத்துள்ளார். உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.