பாராலிம்பிக் 2024 : 7 பதக்கத்துடன் இந்திய அணி! இன்றைய பதக்கப் போட்டிகள் என்னென்ன?
பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் தொடரில் இந்திய அணி இன்று மொத்தம் 10 பதக்கப் போட்டிகள் நடைபெறவுள்ளது.
பாரிஸ் : மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி மிகச்சிறப்பாகவே விளையாடி வருகிறது. இதுவரை இந்திய அணி ஏழு பதக்கங்களை வென்று குவித்துள்ளது. அதில், முன்னதாக 100மீ. பாரா ஓட்டப்பந்தயத்தில் பிரீத்தி பால் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அதன் பிறகு நேற்று நடைபெற்ற 200மீ. பாரா ஒட்டப்பந்தய போட்டியில் பிரீத்தி பால் மீண்டும் வெண்கலப்பதக்கம் வென்றிருந்தார்.
ஒலிம்பிக் தொடரில் விளையாடிய மனு பாக்கரை போல 2 பதக்கங்களை ஒரே ஒலிம்பிக் தொடரில் வென்று சாதனை படைத்துள்ளார். அடுத்ததாக இந்தியாவின் நிஷாத் குமார் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.
இது பாராலிம்பிக் தொடரில் இந்தியாவின் 7-வது பதக்கமாகும். மேலும், இன்று மட்டும் இந்திய வீரர்கள் 10 பதக்கப் போட்டிகளில் விளையாடவுள்ளனர். இதனால், இன்று ஒரே நாளில் 5 முதல் 7 பதக்கம் வரை இந்தியாவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் இன்றைய பதக்கப் போட்டிகள் :
- 1:35 மணி – பாரா தடகளம் – ஆடவர் வட்டு எறிதல் – இறுதிப் போட்டி – யோகேஷ் கதுனியா
- 1:40 மணி – பாரா பேட்மிண்டன் – கலப்பு இரட்டையர் வெண்கலப் பதக்கப் போட்டி – சிவராஜன் சோலைமலை/நித்யா ஸ்ரீ
- 1:30 மணி – பாரா பேட்மிண்டன் – ஆண்கள் ஒற்றையர் தங்கப் பதக்கப் போட்டி – நிதேஷ் குமார் vs டேனியல் பெத்தேல்
- 08:00 மணி – பாரா பேட்மிண்டன் – பெண்கள் ஒற்றையர் பதக்கப் போட்டி – துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ்
- 08:15 மணி – பாரா துப்பாக்கி சுடுதல் – கலப்பு 25 மீட்டர் பிஸ்டல் இறுதிப் போட்டி – நிஹால் சிங், அமீர் அகமது பட்
- 09:40 மணி – பாரா பேட்மிண்டன் – ஆண்கள் ஒற்றையர் – தங்கப் பதக்கப் போட்டி – சுஹாஸ் யதிராஜ்vs லூகாஸ் மஸூர்
- 09:40 மணி – பாரா பேட்மிண்டன் – ஆண்கள் ஒற்றையர் வெண்கலப் பதக்கப் போட்டி – சுஹாஸ் யதிராஜ் vs ஃப்ரெடி செட்டியவான்.
- 10:30 மணி – பாரா தடகளம் – ஆண்களுக்கான ஈட்டி எறிதல் – இறுதிப் போட்டி – சுமித் ஆன்டில், சந்தீப் சஞ்சய் சர்கார், சந்தீப்
- 10:34 மணி – பாரா தடகளம் – பெண்களுக்கான வட்டு எறிதல் – இறுதிப் போட்டி – காஞ்சன் லக்கானி
- 11:50 மணி – பாரா பேட்மிண்டன் – பெண்கள் ஒற்றையர் வெண்கலப் பதக்கப் போட்டி – நித்யா ஸ்ரீ சுமதி சிவன் vs ரினா மார்லினா.