காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கலப்பு இந்திய பேட்மிண்டன் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
2022 காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் கலப்பு பிரிவின் இறுதி போட்டியில் இந்திய பேட்மிண்டன் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. பேட்மிண்டன் கலப்பு அணி பிரிவில் மலேசியாவை எதிர்த்து இந்தியா விளையாடியது. இதில், இந்திய பேட்மிண்டன் கலப்பு அணி, மலேசியாவுக்கு எதிராக 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றது.
மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் மலேசியாவுக்கு எதிரான மோதலில் பிவி சிந்து மட்டுமே வெற்றி பெற முடிந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து ஜின் வெய் கோ-வை எதிர்கொண்டார். இதில், பி.வி.சிந்து 22-20, 21-17 என்ற நேர் செட்களில் ஜின் வெய் கோ-வை வீழ்த்தி ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தார்.
ட்ராவின் முதல் போட்டில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் மற்றும் சிராக் ஜோடி மலேசியாவின் டெங் ஃபாங் ஆரோன் சியா மற்றும் வூய் யிக் ஆகியோருக்கு எதிராக கடினமான முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்தனர். இதன்பின், நெக் டூ நெக் ஆட்டத்தில் மலேசியா ஜோடி அணி 21-18, 21-15 என்ற கணக்கில் கைப்பற்றியது.
டையின் இரண்டாவது ஆட்டத்தில் பிவி சிந்து ஜின் வெய் கோவை எதிர்கொண்டார். போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் ஆக்ரோஷமாக விளையாடி 22-20 என்ற கணக்கில் மலேசியாவின் ஜின் வெய் கோவை வீழ்த்தினார். இதனால், இரு நாடுகளும் ஒரு போட்டி வென்றுள்ள நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் விளையாடினார்.
முன்னாள் உலக நம்பர் 1 வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் லகின் 43-ம் நிலை வீரரான Ng Tze Yong-ஐ எதிர்கொண்டார். ஆனால், 19-21, 21-6, 16-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார் ஸ்ரீகாந்த். ஒரு மணி நேரம் ஆறு நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் மலேசிய வீரர் 21-19, 6-21, 21-16 என்ற செட் கணக்கில் இந்திய ஏஸை வீழ்த்தி தக்க வைத்துக் கொண்டார். ஆட்டத்தின் முடிவில் மலேசியா 2-1 என முன்னிலை பெற்றது.
அடுத்து நான்காவதாக பெண்கள் இரட்டையர் பிரிவில் காயத்ரி – டிரீசா ஜோடி களம் இறங்கினார்கள். இவர்கள் பேர்லி டான் மற்றும் தினா முரளிதரனை எதிர்கொண்டனர். இவர்களும் போராட்டத்தை வெளிப்படுத்தினாலும், 18-21, 17-21 என்ற கணக்கில் மலேசிய அணி செட்டை கைப்பற்ற, 3-1 என்ற கணக்கில் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது மலேசியா. இதனால் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…