டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் தீம் பாடல் வெளியீடு!

மோகித் சவுகான் அவர்கள் இசையமைப்பில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் தீம் பாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வருகிற மாதம் ஜூலை 23-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை 32 வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கவுள்ள 16 பேர் கொண்ட இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக மன்பிரீத் சிங்கும், துணை கேப்டன்களாக பின்கள வீரர்கள் பிரேந்திர லக்ரா, ஹர்மன்பிரீத் சிங் ஆகியோரும் நியமிக்கப்பட்டு இருப்பதாக இந்திய ஹாக்கி அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தற்பொழுது இந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் தீம் பாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லக்ஷிய தேரா சாம்னே ஹே எனும் இந்த பாடல் மோகித் சவுகான் என்பவரால் இசையமைத்து பாடப்பட்டுள்ளது. இதோ அந்த பாடல்,
ஒலிம்பிக் போட்டிக்காக இந்திய அணியின் ‘தீம்’ பாடல்..!!#OlympicGames pic.twitter.com/el4TU382jj
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) June 24, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
டிரம்ப் அதிரடி வரி விதிப்பு.! உலக நாடுகள் கடும் எதிர்ப்பு! சீனா, கனடா, ஆஸ்திரேலியா, தைவான்….
April 3, 2025