7-வது முறையாக சொந்த மண்ணில் சாதனை படைத்த இந்திய அணி..!
இந்தியா , தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று முதல் டெஸ்ட் போட்டி விசாகப் பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி விக்கெட்டை பறிகொடுக்காமல் 202 ரன்கள் எடுத்தது. அப்போது மழை தொடர்ந்து பெய்ததால் நேற்றைய போட்டி கைவிடப்பட்டது.
இப்போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கிய ரோகித் மற்றும் அகர்வால் இருவரும் கூட்டணியில் 202 ரன்கள் அடித்துள்ளனர். இதன்மூலம் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரர்கள் 11-வது முறையாக 200 ரன்னுக்கு மேல் அடித்துள்ளனர். அதில் ஏழு முறை இந்தியாவில் இந்திய வீரர்கள் 200-க்கு மேல் அடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.