பெண்களுக்கான உலக கோப்பைதொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இந்தியா ,பங்களாதேஷ் அணிகள் மோதிவருகின்றனர்.இந்த போட்டி W.A.C.A. மைதானத்தில் நடைபெறுகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீச முடிவு செய்தது.
இந்திய அணி வீராங்கனைகள்:
ஷஃபாலி வர்மா, தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர் ), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன் ), தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், வேதா கிருஷ்ணமூர்த்தி, ஷிகா பாண்டே, அருந்ததி ரெட்டி, பூனம் யாதவ், ராஜேஸ்வரி கயக்வாட் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
பங்களாதேஷ் அணி வீராங்கனைகள்:
முர்ஷிதா கதுன், ஷமிமா சுல்தானா, சஞ்சிதா இஸ்லாம், நிகர் சுல்தானா (விக்கெட் கீப்பர்), ஃபர்கானா ஹோக், ருமேனா அகமது, சல்மா கதுன் (கேப்டன் ), பாஹிமா கதுன், ஜஹனாரா ஆலம், பன்னா கோஷ், நஹிதா அக்டர் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
முதலில் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் தனியா பாட்டியா 2 ரன்னில் வெளியேற பின்னர் ஷெபாலி வர்மா , ஜெமிமா இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய ஷெபாலி வர்மா 39 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் 2 ரன்னில் நடையை கட்டினார்.
தற்போது களத்தில் தீப்தி சர்மா 4 , ஜெமிமா 33 ரன்களுடன் இருவரும் விளையாடி வருகின்றனர். இந்திய அணி 12 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 87 ரன்கள் எடுத்து உள்ளனர்.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…