தென் ஆப்பிரிக்கா அணியை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்புடன் இந்திய அணி..!
தென்னாபிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 போட்டியில் முதல் போட்டி மழையால் ரத்ததானது.
மீதமுள்ள இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால் 1-1 என்ற கணக்கில் தொடர் முடிந்தது.இதைத் தொடர்ந்து இரு அணிகளும் தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
முதல் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்திலும் , இரண்டாவது போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 136 ரன்கள் வெற்றி பெற்று 2 -1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இன்று கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி காலை 09.30மணிக்கு தொடங்க உள்ளது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி ஒயிட் வாஷ் செய்தது. கோப்பையை கைப்பற்றும் என இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியிருந்தார். அதன்படி ஒயிட்வாஷ் செய்யும் முனைப்புடன் இந்திய அணி இன்று மோத உள்ளது.