டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற விட்டால் இவ்வளவு பெரிய பிரச்சனையா..!
தென்னாபிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில் 1-1 என்ற கணக்கில் தொடர் டிராவில் முடிந்தது. இதை தொடர்ந்து வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி இரு அணிகளுக்கும் இடையே முதல் டெஸ்ட் தொடர் போட்டி தொடங்க உள்ளது.
இந்த டெஸ்ட் தொடரில் ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய அணி 115 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்கா அணி 108 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்த தொடர் 1 – 1 என்ற கணக்கில் சமனில் முடிந்தால் இந்திய அணி ஐசிசி தரவரிசைப் பட்டியல் முதல் இடத்தில் தான் இருக்கும் அப்போது பிரச்சினை கிடையாது. ஆனால் 0-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோற்றால் முதலிடத்தை இழந்து விடும் .
அதேபோல 0-2 , 0- 3 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தால் ஐசிசி தரவரிசை பட்டியலில் தென்னாபிரிக்கா அணி முதலிடத்தை பிடித்து இந்திய அணியை இரண்டாம் இடத்திற்கு தள்ளி விடும் இப்படி ஒரு மிகப்பெரிய அபாயத்துடன் இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
இந்த பெரிய பிரச்சனை உடன் இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி விளையாட உள்ளது. டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலிடத்தில் வைப்பாரா கோலி.