இலங்கை, ஆஸ்திரேலியா இடையிலான தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது..களமிறங்கும் முக்கிய வீரர்கள்..!

Default Image
  • இந்திய அணி  அடுத்தமாதம் (ஜனவரி ) இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தொடர்களில் விளையாட உள்ளனர்.
  • இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பும்ரா மற்றும் தவான் ஆகியோருக்கு இடம் கிடைத்தது.

இந்திய அணி, நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில், இந்திய அணி ஜனவரி மாதம் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாட உள்ளனர்.

இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு  இன்று அறிவிக்கப்பட்டது. இந்த பட்டியலில் இந்திய அணியை சேர்ந்த முக்கிய முக்கிய வீரர்கள் களமிறங்கவுள்ளனர். இதில், பும்ரா மற்றும் தவான் ஆகியோருக்கு இந்த பட்டியலில் இடம் பிடித்தனர்.

Image result for bumrah and dhawan"

 டி 20 தொடர் :

இந்திய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி, வரும் ஜனவரி மாதம் 5ஆம் தேதி 3 டி-20 போட்டிகள் விளையாட உள்ளது. இதில், கோலி தலைமையில் உள்ள இந்திய அணியின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போட்டியில் ரோஹித் ஷர்மாக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. மேலும், நீண்ட இடைவேளைக்கு பிறகு, பும்ராவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

 டி 20  தொடருக்கான வீரர்கள்:

விராட் கோலி,ஷிகர் தவான், கே.எல் ராகுல், ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் அய்யர், ரவீந்திர ஜடேஜா, சிவம் தூபே, சாஹல், குல்திப் யாதவ், பும்ரா, நவ்தீப் சைனி, ஷ்ரதுல் தாகூர், மணிஷ் பாண்டே, வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன்.

ஒரு நாள் தொடர் :

இந்திய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா அணி, ஜனவரி 14-ம் தேதி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.  இதில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ரோகித் சர்மாவும், கேதர் ஜாதவும் அணியில் இணைகின்றனர்.

ஒரு நாள் தொடருக்கான வீரர்கள்:

விராட் கோலி ,ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, கே.எல் ராகுல், ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் அய்யர், கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சிவம் தூபே, பும்ரா, சாஹல், குல்திப் யாதவ், நவ்தீப் சைனி, ஷ்ரதுல் தாகூர், மணிஷ் பாண்டே.

இந்த போட்டிகளை தொடர்ந்து இந்திய அணி, நியூஸிலாந்து நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ளது. அதற்கான பட்டியலை இன்னும் வெளிவரவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்