இந்தியா,பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 14-ம் தேதி தொடங்கி நேற்று முடிந்தது.இப்போட்டி இந்தூரில் நடைபெற்றது.முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பான பந்துவீச்சால் இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் இந்திய அணி தொடர்ந்து மூன்று டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய &பாகிஸ்தான் அணியின் சாதனையை சமன் செய்து உள்ளது.
இந்திய அணி இந்த வருடம் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக புனேவில் இன்னிங்ஸ் மற்றும்137 ரன்கள், ராஞ்சியில் இன்னிங்ஸ் & 202 ரன்கள் வித்தியாசத்தில் என இரண்டு முறை வெற்றி பெற்றது.இதை தொடர்ந்து நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிராக இன்னிங்ஸ் & 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி கடந்த 1930 மற்றும் 31-ம் ஆண்டு தொடர்ந்து மூன்று முறை இன்னிங்ஸ் மற்றும் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. அதன் பிறகு பாகிஸ்தான் அணி கடந்த 2001 மற்றும் 02- இதே சாதனையை படைத்தது.
இதை தொடர்ந்து தற்போது இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் & 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரு அணியின் சாதனையை சமன் செய்து உள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…