இந்திய அணி சமீபத்தில் தென்னாபிரிக்கா அணியுடன் இந்திய அணி டெஸ்ட் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடியது. இதில் இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்கா ஒயிட்வாஷ் செய்து கோப்பையை கைப்பற்றியது.
இதைத்தொடர்ந்து இந்திய அணி வருகின்ற நவம்பர் 3-ம் தேதி பங்களாதேஷ் அணியுடன் டி20 , டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. நவம்பர் 03 ,07 மற்றும் 10 ஆகிய மூன்று நாட்களில் 3டி20 போட்டிகளில் விளையாட உள்ளனர்.
இதைத்தொடர்ந்து இந்த இரு அணிகளும் 14-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டியிலும் , 22-ம் தேதி 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர். இந்த இரு தொடருக்கான இந்திய அணி இந்திய அணியை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது. அதில் கேப்டன் விராட் கோலிக்கு டி-20 தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சன் இரட்டை சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் டி-20 தொடருக்கு தொடக்க வீரர் ரோஹித் சர்மா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள்:
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, மாயங்க் அகர்வால், சேதேஸ்வர் புஜாரா, அஜின்கியா ரஹானே, ஹனுமா விஹாரி, சஹா (விக்கெட் கீப்பர்), ஆர் ஜடேஜா, ஆர் அஸ்வின், குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, சுப்மான் கில்ஆகியோர் இடம்பெற்றனர்.
டி 20 போட்டிக்கான வீரர்கள்:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், கிருனல் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், ராகுல் சாஹர், தீபக் சாஹர், கலீல் தாகுத், ஷிவாம் தாகம் ஆகியோர் இடம்பெற்றனர்.
சென்னை : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி, வெற்றி…
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…