செஸ் கேண்டிடேட் தொடரில் விளையாட இந்திய வீராங்கனை வைஷாலி தேர்வு.!

Published by
செந்தில்குமார்

இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டரும், 2023 உலக கோப்பை செஸ் தொடரில் இரண்டாம் இடம் பிடித்த ஆர்.பிரக்ஞானந்தாவின் மூத்த சகோதரியான வைஷாலி, செஸ் கேண்டிடேட் தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஃபிட் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டி பிரிட்டனில் உள்ள ஐல் ஆஃப் மேன் பகுதியில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டி அக்டோபர் 23ம் தேதி முதல் நவம்பர் 6ம் தேதி வரை நடைபெறும். இது உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதிச்சுற்றின் ஒரு பகுதியாகும். சுவிஸ் பிரிவின் கீழ் 11 சுற்றுகள் விளையாடப்படும். இதில் அனைத்து கண்டங்களில் இருந்தும் 164 வீரர்கள் பங்கேற்கின்றனர். கிராண்ட் ஸ்விஸ்ஸில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் வீரர்கள், 2024 பெண்கள் கேண்டிடேட் தொடருக்குத் தேர்வு பெறுவார்கள்.

அதன்படி, இந்த கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் மகளிர் பிரிவில் பிரக்ஞானந்தாவின் சகோதரி ஆர் வைஷாலி பங்கேற்று விளையாடி வருகிறார். இதில் ஃபிட் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் ஒன்பதாவது நேற்று நடைபெற்றது. இந்த சுற்றில் முன்னாள் உலக சாம்பியனான பல்கேரியாவின் அன்டோனெட்டா ஸ்டெபனோவாவை வைஷாலி வீழ்த்தினார்.

இதனால் அவர் 7 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றார். இதையடுத்து முன்னாள் மகளிர் உலக சாம்பியனான சீனாவின் டான் ஜாங்கியை எதிர்கொண்டு அவரைத் தோற்கடித்தார். இந்த 10-வது சுற்றில் வெற்றி பெற்றதால் 7.5 புள்ளிகளை பெற்று முன்னிலை அடைந்த வைஷாலி, செஸ் கேண்டிடேட் தொடரில் விளையாட தேர்வாகியுள்ளார்.

உக்ரேனியாவின் அன்னா முசிச்சுக் 8 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார். மேலும், வைஷாலி ஃபிட் கிராண்ட் சுவிஸ் போட்டியின் பெண்கள் பிரிவில் வெற்றி பெற இன்னும் ஒரு ஆட்டம் உள்ளது. அதன்படி, இன்று நடைபெறும் 11-வது மற்றும் இறுதி சுற்றில் மங்கோலிய வீராங்கனை பட்குயாக் முங்குந்துளை எதிர்கொள்கிறார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

24 minutes ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

60 minutes ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

4 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

4 hours ago

மகளிர் ஒருநாள் போட்டி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!

குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…

5 hours ago

ஏற்றமா? இறக்கமா? ‘விடுதலை 2’ இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.!

சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…

5 hours ago