பாபர் அசாமை ஓரம்கட்டி.. பாகிஸ்தானிலும் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர் சுப்மான் கில்!

Shubman Gill

2023-ஆம் ஆண்டு முடிவடையும் இருக்கும் நிலையில், கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட முக்கியமான நிகழ்வுகள், விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள் உள்ளிட்டவை குறித்து பட்டியல் வெளியிடப்படுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், இந்த ஆண்டில் கூகுளில் அதிகளவில் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் பட்டியல் வெளியானது.

அதன்படி, உலகம் முழுவதும் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்களின் டாப் 10 பட்டியலில், உலகின் முன்னணி வீரர்கள் சிலரது பெயர் இடம் பெறவில்லை. அதாவது, இந்திய கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரும் டாப் 10 பட்டியலில் இடம்பிடிக்கவில்லை. ஆனாலும், உலகளவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்களின் டாப் 10 பட்டியலில் ஒரேயொரு இந்திய வீரர் இடம்பிடித்துள்ளார்.

விஜய் ஹசாரே டிராபி 2023: நிறைய ரத்தம், வாயில் பெரிய அடி.. வலியுடன் போராடிய பாபா இந்திரஜித்!

முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்த ஒரே இந்திய கிரிக்கெட் வீரர் என்கிற பெருமையை சுப்மான் கில்லே பெற்றுள்ளார். இந்திய தொடக்க ஆட்டக்காரரான அவர் 9வது இடத்தில் இருக்கிறார். ஆனால்,  8வது இடத்தில் இந்திய வம்சாவளி வீரரான நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா இடம்பிடித்துள்ளார். இந்த நிலையில், 2023ல் பாகிஸ்தானில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களில் முதல் 10 இடங்களில் சுப்மான் கில் உள்ளார்.

2023ம் ஆண்டு சுப்மான் கில்லுக்கு சிறப்பான ஆண்டாக அமைந்ததால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் கூகுள் தேடல்களில் முதல் 10 இடங்களில் ஆதிக்கம் செலுத்தியுள்ளார். இதில், ஆச்சரியம் என்னவென்றால், 2023 ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை போன்ற முக்கியமான போட்டிகள் இருந்தபோதிலும், பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் பாகிஸ்தானில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம்பெறவில்லை என்பதுதான்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்