பாகிஸ்தானை விட இந்திய தான் மிக ஆபத்தானது.! எஹ்மான் மானி .!

Default Image
  • பங்களாதேஷ் அணி பாகிஸ்தானில் விளையாட இருந்த தொடரை பாதுகாப்பை காரணம் காட்டி நிராகரித்து விட்டது.
  • பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர்  எஹ்மான் மானி கூறுகையில் ,பாகிஸ்தானை விட இந்தியாவில் தான் ஆபத்து அதிகம் என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில்  கடந்த 2009-ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி விளையாட சென்ற சென்றது. அப்போது இலங்கை அணி வீரர்கள் பேருந்தில்  லாகூரில் கடாபி ஸ்டேடியம் அருகே சென்ற போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில்  இலங்கை அணி வீரர்கள் 8 பேர் இறந்தனர் , 6 பேர் காயமடைந்தனர்.

அதன் பின்னர் பாதுகாப்பை கருதி மற்ற அணிகள் அங்கு செல்ல மறுப்பு தெரிவித்து வந்தனர். இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் சமீபத்தில் விளையாடியது. இந்த தொடரை பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் நேற்று முன்தினம் கைப்பற்றியது.

இந்நிலையில் பங்களாதேஷ் அணி பாகிஸ்தானில் விளையாட இருந்த தொடரை பாதுகாப்பை காரணம் காட்டி நிராகரித்து விட்டது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் எஹ்மான் மானி கூறுகையில், “பாகிஸ்தான் பாதுகாப்பானது என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம். எந்த அணி பாகிஸ்தான் பாதுகாப்பு இல்லை என்று கூறுகிறதோ அந்த அணி அதனை நிரூபிக்க வேண்டும்.

இலங்கை தொடருக்கு பின்னர் எந்தவொரு நாடும் பாதுகாப்பு ஏற்பாட்டை பற்றி கவலைப்பட முடியாது, மீடியாக்களும், ரசிகர்களும் உலகளவில் பாகிஸ்தானை நேர்மறையாக காட்ட முக்கிய பங்காற்றினர். பாகிஸ்தானை விட இந்தியாவில் தான் ஆபத்து அதிகம் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமால், எஹ்மான் மானி இந்தியாவின் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவிப்பதற்கு தகுதியற்றவர் என கூறி உள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்