இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தோனி கேப்டனாக இருந்த காலத்தில் தங்களுக்கு போதுமான விளையாட்டு அனுபவம் கிடைக்கவில்லை என்றும், அப்போது அணியில் 6 முதல் 7 வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்ததால், அவர்களை சுழற்சி முறையில் தோனி பயன்படுத்துவார் என்று தெரிவித்தார். அதனால் பந்து வீச்சாளர்களிடையே போதுமான புரிதலும், ஒருங்கிணைப்பும் இல்லாமல் இருந்ததாக குற்றம்சாட்டினார் .
பின்னர் தொடர்ந்து பேசிய இஷாந்த் சர்மா, தற்போது கேப்டன் கோலியின் தலைமையில் பந்து வீச்சாளர்கள் இடையே தற்போது 3 முதல் 4 பத்துவீச்சாளர்கள் மட்டுமே பயன்டுத்தப்படுவதால் அவர்களிடையே நல்ல ஒருங்கிணைப்பும் புரிதலும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் குறைவான பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருப்பதால் அவர்களுக்கு அதிக அனுபவமும் அதிக போட்டிகளில் விளையாடும் வாய்ப்பும் கிடைக்கும் எனவும் கூறினார். தோனி கேப்டனாக இருந்த காலத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை என தெரிவித்தார்.
மேலும் 2010-ம் ஆண்டு முதல் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காக அதிக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதனால் பல நாட்கள் தனது தூக்கத்தை இழந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இப்பொழுது எதைப் பற்றியும் அதிகம் சிந்திக்காமல் தனது முழு திறமையையும் பந்துவீச்சின் மீதே வெளிப்படுத்துவதாகவும் இஷாந்த் சர்மா செய்தியாளர்களிடையே கூறினார்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…