அந்த மாதிரி பசங்க தான் பிடிக்கும்! ஸ்மிருதி மந்தனா ஓபன் டாக்!

Smriti Mandhana

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இந்திய அணிக்காக 200-க்கு மேற்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு இவருக்கென்று பல ரசிகர்கள் இருக்கிறார்கள். 27 வயதான ஸ்மிருதி மந்தனா  இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் தொடர்ச்சியாக கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், ஸ்மிருதி மந்தனா சமீபத்தில் இளம் கிரிக்கெட் வீரர் இஷான் கிஷனுடன் இணைந்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடத்தும் கோன் பனேகா குரோர்பதி ( Kaun Banega Crorepati) நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஸ்மிருதி மந்தனா அங்கிருந்த ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது அந்த நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் உங்களுக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் உங்களுக்கு எந்த மாதிரி ஆண்கள் பிடிக்கும்  எந்த மாதிரி ஒருவரை திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்கள்? என்று கேள்வி கேட்டார். அந்த கேள்விக்கு பதில் அளித்த ஸ்மிருதி மந்தனா ” நான் திருமணம் செய்துகொள்ளப்போகும் நபர் அப்படி இருக்கவேண்டும் இப்படி இருக்கவேண்டும் என்று எல்லாம் இல்லை.

ISPL T10 கிரிக்கெட் லீக்: சென்னை அணியை வாங்கிய நடிகர் சூர்யா!

மனிதர்களை மதிக்க தெரிந்த ஒரு நல்ல குணம் கொண்டவராக இருக்கவேண்டும். நான் ஒரு கிரிக்கெட் வீராங்கனை எனவே என்னுடைய சூழ்நிலைகளை அவர் நன்றாக புரிந்துகொண்டு நடந்தால் இன்னும் அருமையாக இருக்கும். ஒரு பெண்ணாக இருந்து என்னால் அவருடன் நீண்ட நேரம் செலவு செய்யமுடியாது. இந்த விஷயத்தையும் அவர் புரிந்துகொள்ளவேண்டும்.

என்னை பொறுத்தவரை இது தான் எனக்கு பிடித்த விஷயங்கள் நான் எதிர்பார்க்கும் விஷயங்கள். இப்படி இருக்கும் பசங்கள் தான் எனக்கு பிடிக்கும்.  என்னை நன்றாக பார்த்துக்கொள்ளும் ஒரு மனிதர் கிடைத்துவிட்டால் நான் அதிர்ஷ்டசாலி தான் ” எனவும் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்