IndVsSA: 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!
தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று முதல் (ஜனவரி 3) கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 23.2 ஓவர்களில் 55 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
அடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 34.5 ஓவரில் 153 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 109 ரன்கள் முன்னிலையில் இருந்நிலையில், தென்னாபிரிக்க அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது.
#INDvsSA : ஒரே நாளில் 23 விக்கெட்! 122 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை!
அடுத்ததாக தென்னாபிரிக்க அணி தனது 2-வது இன்னிங்ஸில் 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது.
தொடக்கத்தில் இருந்தே நிதானமாக விளையாடி வந்த இந்திய அணி 12 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 28, ரோகித் சர்மா 17 ரன்கள் எடுத்தனர்
ஏற்கனவே, இதற்கு முன்னதாக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளதால் இந்த டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.