20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை படைத்த இந்திய கேப்டன் கிங் கோலி.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • நேற்று இந்தியா, இலங்கை அணிக்கான 2-வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் 144 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது.
  • 30, டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ள கோலி, வேகமாக 1000 ரன்களை கடந்தவர் எனும் பெருமையை இந்தப் போட்டியின் மூலம் பெற்றார்.

இலங்கை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வந்துள்ளது.இத்தொடரின் முதல் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் “டாஸ்” போடப்பட்டு இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது. பின்னர் மழை குறிக்கிட்டதாழலும், மைதானத்தில் ஈரப்பதம் காரணத்தால் போட்டி ரத்து செய்யப்பட்டது.

இதைதொடர்ந்து நேற்று  2-வது போட்டி மத்தியபிரதேசத்தில் உள்ள இந்தூர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச முடிவு செய்தார். முதலில் இறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 142 ரன்கள் எடுத்தனர். பின்னர் இறங்கிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் 144 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது.

இதனிடையே, நேற்றைய போட்டியில் களமிறங்கிய கோலி, ஆட்டமிழக்காமல் 30 ரன்கள் அடித்தார். பின்னர் 30, டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ள கோலி, வேகமாக 1000 ரன்களை கடந்தவர் எனும் பெருமையை இந்தப் போட்டியின் மூலம் பெற்றார். அதேபோல பொத்தாம் 77 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 2,663 ரன்களுடன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். டி20 போட்டிகளில் கோலியின் அதிகபட்ச ஸ்கோர் 94 (நாட்-அவுட்) இதில் 24 அரைசதங்கள் அடித்துள்ள விராட் கோலி 248 பவுண்டரிகளும், 73 சிக்சர்களும் அடித்துள்ளார்.

பின்னர் கோலியை தொடர்ந்து ரோகித் சர்மா 104 போட்டிகளில் 2,633 ரங்களுடன் 2-வது இடத்திலும், நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் 83 போட்டிகளில் 2,436 ரன்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர் என்று குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மாமல்லபுரம் அருகே பயங்கர விபத்து! மாடு மேய்த்துக்கொண்டிருந்த 5 பெண்கள் பலி!

செங்கல்பட்டு : திருப்போரூர் அருகே கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்த  சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் உள்ள…

45 minutes ago

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது – முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

சென்னை : பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என்றும், அதற்கு மாற்றாக சமூகநீதி அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள…

60 minutes ago

கனமழை எச்சரிக்கை… நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை :  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்கு புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு…

1 hour ago

மகாராஷ்டிரா முதலமைச்சர் ரேஸில் பின்வாங்கிய ஷிண்டே! பரபரப்பு பேட்டி!

தானே : அண்மையில் நடைபெற்று முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி…

1 hour ago

7 மணி வரை இந்த 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை :  வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்குள் புயலாக வலுப்பெறும் என…

2 hours ago

ஐசிசி டெஸ்ட் தரவரிசை : மீண்டும் முதலிடம் பிடித்து ஜஸ்பிரித் பும்ரா அசத்தல்!!

மும்பை : இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான 5 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி…

2 hours ago