20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை படைத்த இந்திய கேப்டன் கிங் கோலி.!
- நேற்று இந்தியா, இலங்கை அணிக்கான 2-வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் 144 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது.
- 30, டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ள கோலி, வேகமாக 1000 ரன்களை கடந்தவர் எனும் பெருமையை இந்தப் போட்டியின் மூலம் பெற்றார்.
இலங்கை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வந்துள்ளது.இத்தொடரின் முதல் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் “டாஸ்” போடப்பட்டு இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது. பின்னர் மழை குறிக்கிட்டதாழலும், மைதானத்தில் ஈரப்பதம் காரணத்தால் போட்டி ரத்து செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து நேற்று 2-வது போட்டி மத்தியபிரதேசத்தில் உள்ள இந்தூர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச முடிவு செய்தார். முதலில் இறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 142 ரன்கள் எடுத்தனர். பின்னர் இறங்கிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் 144 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது.
இதனிடையே, நேற்றைய போட்டியில் களமிறங்கிய கோலி, ஆட்டமிழக்காமல் 30 ரன்கள் அடித்தார். பின்னர் 30, டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ள கோலி, வேகமாக 1000 ரன்களை கடந்தவர் எனும் பெருமையை இந்தப் போட்டியின் மூலம் பெற்றார். அதேபோல பொத்தாம் 77 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 2,663 ரன்களுடன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். டி20 போட்டிகளில் கோலியின் அதிகபட்ச ஸ்கோர் 94 (நாட்-அவுட்) இதில் 24 அரைசதங்கள் அடித்துள்ள விராட் கோலி 248 பவுண்டரிகளும், 73 சிக்சர்களும் அடித்துள்ளார்.
பின்னர் கோலியை தொடர்ந்து ரோகித் சர்மா 104 போட்டிகளில் 2,633 ரங்களுடன் 2-வது இடத்திலும், நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் 83 போட்டிகளில் 2,436 ரன்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர் என்று குறிப்பிடப்படுகிறது.