காமன்வெல்த் 2022 : இந்திய வீராங்கனைக்கு தொடர் மன உளைச்சல்.. பயிற்சியாளர் வெளியேற்றம்.!
இந்திய குத்துசண்டை வீராங்கனை லவ்லினா, காமென்வெல்த் போட்டி தொடரில் பயிற்சி மேற்கொண்டு வரும் எனக்கு தொடர் மனஉளைச்சல் கொடுக்கப்படுகிறது என வருத்தம் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் புகழ்பெற்ற காமென்வெல்த் போட்டித்தொடர் ஜூலை இறுதியில் தொடங்க உள்ளது. இதில் உலக அளவில் தடகள போட்டியாளர்கள் கலந்துகொள்வார்கள்.
இதில், இந்தியா சார்பில் தடகள வீரர், வீராங்கனைகள் 215 பேர் கலந்துகொள்ள உள்ளனர். அதற்காக தற்போது அனைவரும் இங்கிலாந்து, பிர்மிங்கம் எனும் ஊரில் தீவிர பயிற்சி எடுத்து வருகின்றனர்.
அதில், கடந்த ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் குத்துச்சண்டையில் இந்தியவுக்காக விளையாடி, வெண்கல பதக்கம் வென்ற லவ்லினா எனும் வீராங்கனை காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்ள இங்கிலாந்தில் இருக்கிறார்.
இந்நிலையில், அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ஓர் புகாரை தெரிவித்து உள்ளார். அதாவது, எனது 2 பயிற்சியார்களில் ஒருவர் ஏற்கனவேவெளியேற்றப்பட்டார்.
அதனை தொடர்ந்து, தற்போது இன்னொரு பயிற்சியாளரும் வெளியேற்றப்பட்டுள்ளார். 8 நாட்களுக்கு முன்பே எனது பயிற்சி நிறுத்தப்பட்டுள்ளது. எனக்கு தொடர் மனஉளைச்சல் கொடுக்கப்படுகிறது என தனது ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார்.
எவ்வளவு மன உளைச்சல் கொடுத்தாலும், நான் இந்தியாவுக்காக பதக்கம் வெல்வேன் என குறிப்பிட்டுள்ளார்.
???? pic.twitter.com/2NJ79xmPxH
— Lovlina Borgohain (@LovlinaBorgohai) July 25, 2022