உலக இளையோர் தடகள சாம்பியன்ஷிப்பில் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஷைலி சிங் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் கடந்த சில நாட்களாக உலக இளையோர் U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி,முன்னதாக நடைபெற்ற தடகள போட்டியில் பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் ஷைலி சிங் முதலில் 6.34 மீட்டரையும், 2வதாக 5.98 மீட்டரையும் தாண்டி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார்.
இந்நிலையில்,நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 17 வயதான ஷைலி சிங், 6.59 மீ நீளம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.இவருடன் போட்டியில் பங்கேற்ற ஐரோப்பிய ஜூனியர் சாம்பியன் மஜா அஸ்காக் 6.60 மீட்டர் நீளம் தாண்டி தங்கபதக்கம் வென்றார்.எனினும்,ஷைலி சிங்கின் தங்கப் பதக்க வாய்ப்பு 1 சென்டிமீட்டர் வித்தியாசத்தில் நழுவியது என்பது குறிப்பிடதக்கது.
ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. அரசியல் கட்சியினர்…
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…