டோக்கியோ ஒலிம்பிக்:துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் இறுதி சுற்றுக்கு தகுதி…!
டோக்கியோ ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று 32-வது ஒலிம்பிக் போட்டியின் திறப்பு விழாவானது தொடங்கியது.
அதன்படி,டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற மகளிர் 10 மீ ஏர் ரைபிள் பிரிவின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் இளவேனில் வலரிவன் மற்றும் அபுர்வி சண்டேலா தகுதி பெறத் தவறிவிட்டனர்.
இந்நிலையில்,டோக்கியோ ஒலிம்பிக்கில் 10 மீ ஆண்கள் ஏர் பிஸ்டல் பிரிவில்,இந்தியாவின் சவுரப் சவுத்ரி மொத்தம் 586 மதிப்பெண்களைப் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.மேலும்,சவுத்ரி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
Our man @SChaudhary2002 is in his 1st #Olympic final. Shoots 586 in Men’s 10M Air Pistol ???? qualification to top the field and make it India’s first #shooting final of @Tokyo2020 Go #India @WeAreTeamIndia #Cheer4India pic.twitter.com/2cS6uxbQag
— NRAI (@OfficialNRAI) July 24, 2021
மற்றொரு வீரரான அபிஷேக் வர்மா 575 புள்ளிகள் பெற்று 17 வது இடம் பிடித்ததால்,போட்டியிலிருந்து வெளியேறினார்.
சவுரப் சவுத்ரி:
இவர் 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீ ரிலே துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா சார்பில் விளையாடிய இவர் தங்கம் வென்றார். மேலும் இவர் ஜெர்மனி,சுல்லில் நடைபெற்ற ஐஎஸ் எஸ் எஃப் எனும் இளையோருக்கான உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து தங்கம் வென்றார்.
இதனையடுத்து,2019 பிப்ரவரியில் டெல்லியில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதலில் 10 மீ 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்றார். இதன் மூலம் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.