இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த் ஊக்கமருந்து சோதனையில் சஸ்பெண்ட்.!
இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த், ஊக்கமருந்து எடுத்துக்கொண்டது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனையான டூட்டி சந்த், தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்கள்(ஊக்கமருந்து) எடுத்துக்கொண்டது, பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் டூட்டி சந்த், தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் அதிவேகப் பெண்மணியான சந்த், ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் மற்றும் 100 மீட்டர் ஓட்டத்தில் உலகப் பல்கலைக் கழக விளையாட்டு சாம்பியன் படத்தையும் வென்றிருக்கிறார், 26 வயதான சந்த், 2016 ஆம் ஆண்டு தோஹாவில் நடந்த இன்டோர் ஏசியன்ஸ் போட்டியில், 60 மீட்டர் தூரத்தை 7.28 வினாடிகளுடன் கடந்து தேசிய அளவில் சாதனை படைத்திருந்தார்.
2019 ஆம் ஆண்டில், ஓரின சேர்க்கையாளராக வெளி வந்த முதல் இந்திய தடகள வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.