#INDvsSA : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றது இந்தியா!

INDvsSA

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் இரண்டு போட்டிகள் ஏற்கனவே நடந்து முடிந்திருந்த நிலையில், நேற்று இந்த ஒரு நாள் கோப்பையை வெல்ல போகும் அணியை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நேற்று பார்லில் உள்ள போலன்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

ஏற்கனவே நடந்து முடிந்த இரண்டு போட்டிகளில் தென்னாப்பிரிக்கா இந்தியா இரண்டு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் இருந்தது. எனவே, நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டி மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

ஆர்சிபிக்கு கப் அடிச்சு கொடுங்க! ரசிகர் கேள்விக்கு பதில் அளித்த தோனி!

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி அதிரடியாக விளையாடி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 108 ரன்கள் மற்றும் திலக் வர்மா 52 ரன்கள் எடுத்தனர். பந்துவீச்சை பொறுத்தவரையில் பி ஹென்ட்ரிக்ஸ் 3 விக்கெட்களும், நந்த்ரே பர்கர் 2 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தார்கள்.

இந்திய அணி 296 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 45.5 ஓவர்களில் தங்களுடைய 10 விக்கெட்களையும் இழந்து 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 78 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்று தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்த ஒரு நாள் தொடரை கைப்பற்றி கோப்பையை வென்றது. இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங்4 விக்கெட் எடுத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்