பாரிஸ் ஒலிம்பிக் : 6-வது பதக்கம் வென்றும் முன்னேற முடியாத இந்தியா..! காரணம் இது தான் !
பாரிஸ் : பாரிஸில் நடைபெற்று வரும் 33-வது ஒலிம்பிக் தொடரானாது தற்போது முடியும் நாளை எட்டியுள்ளது. இந்த தருணத்தில் இந்திய அணி 6 பதக்கங்களை கைப்பற்றி உள்ளது. நேற்று வரை 5 பதக்கங்களை கைப்பற்றி இருந்தது. அதன் பின் நேற்று இரவு நடைபெற்ற ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய அணி சார்பாக விளையாடிய அமன் செஹ்ராவத் வெண்கல பதக்கம் வென்று அசத்தினார்.
இதனால் இந்திய அணி இந்த ஆண்டு ஒலிம்பிக் தொடரில் 6-வது பதக்கம் வென்றுள்ளது. மேலும், 6-வது பதக்கம் வென்றதால் பதக்கப்பட்டியலில் இந்தியா பின்னடைவையே சந்தித்துள்ளது. 6 பதக்கம் வென்றும் பதக்கப்பட்டியலில் 69-வது இடத்தில் இந்திய அணி இருந்து வருகிறது.
ஆனால், நம் அண்டை நாடான பாகிஸ்தான் ஒரே ஒரு தங்கப் பதக்கத்தை மட்டுமே வென்றுள்ளது. ஆனால், பதக்கப்பட்டியலில் 58-வது இடத்தில் இருந்து வருகிறது. ஒலிம்பிக் பதக்க பட்டியலை பொறுத்தவரையில் முதலில் அதிக தங்கப்பதக்கங்கள் வென்ற நாடுகளே வரிசைப்படுத்தப் படுவார்கள்.
ஒரு உதாரணமாக அமெரிக்கா 60 வெண்கலப்பதக்கமும், 10 தங்கப் பதக்கமும் வென்றுள்ளது என எடுத்துக் கொள்ளவோம். மறுமுனையில், இந்தியா 20 தங்கப்பதக்கம் வென்றிருந்தால் இந்திய அணியே பதக்கப்பட்டியலில் முன்னிலையில் இருப்பார்கள். அதனால் தான் பாகிஸ்தான் ஒரு தங்கம் வென்று 58-வது இடத்தில் இருந்து வருகிறது.
இந்திய அணி ஒரு தங்கப் பதக்கம் வென்றிருந்தால் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி 35-வது இடத்திற்கு முன்னேறி இருப்பர்கள். இதற்கு இனி ஒரே ஒரு வாய்ப்பே உள்ளது, இன்றைய நாள் மதியம் நடைபெறும் மகளீருக்கான 76 கிலோ எடைப்பிரிவில் மல்யுத்த போட்டியின் காலிறுதி சுற்றானது நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் இந்தியா அணி சார்பாக ரித்திகா கலந்து கொண்டு விளையாடவுள்ளார். இந்த போட்டியில் எப்படியாவது இந்திய அணி தங்கம் வென்றால், பதக்கப் பட்டியலில் இந்தியா அணி 35-வது இடத்திற்கு முன்னேறி விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.