ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை வென்றது இந்தியா – வென்றவர் யார்?..!
டோக்கியோ ஒலிம்பிக்கில் தனது முதல் பதக்கத்தை இந்தியா வென்றது வென்றுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.இந்தியா சார்பாக 127 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில்,இன்று நடைபெற்ற மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு,ஸ்னாட்ச் மற்றும் கிளீன் அவுட் ஜெர்க் ஆகிய பிரிவுகளில் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.இதனால்,தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா வென்றுள்ள முதல் பதக்கமாக இது கருத்தப்படுகிறது.மேலும்,பதக்க பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.இதில்,சீனாவின் ஹோ சிஹாய் 210 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கத்தை வென்றார்.
#TeamIndia | #Tokyo2020 | #Weightlifting
Women’s 49kg ResultsSilver lined beginning for India! @mirabai_chanu wins Silver medal in @Tokyo2020 Weightlifting becoming the only 2nd Indian weightlifter ever to win an #Olympics medal. #WayToGo champ #EkIndiaTeamIndia #Cheer4India pic.twitter.com/oNqElqBGU2
— Team India (@WeAreTeamIndia) July 24, 2021
இதற்கு முன்னதாக இந்திய வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி கடந்த 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற சிட்னி ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற நிலையில்,தற்போது மீராபாய் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இதனால்,ஒலிம்பிக் வரலாற்றில் பளு தூக்குதல் போட்டியில் இந்தியா இதுவரை இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது.மேலும்,ஒலிம்பிக்கில் முதல்
மீராபாய் சானு:
கிளாஸ்கோவின் 2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பெண்கள் 48 கிலோ எடை வகுப்பில் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார்.பெண்கள் 48 கிலோ பிரிவில் சானு 2016 ரியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்.2017 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் அனாஹெய்மில் நடைபெற்ற உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் 194 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்று மிகப்பெரிய சாதனை படைத்தார்.
இதனை தொடர்ந்து,2018 ஆம் ஆண்டு கோல்ட் கோஸ்டில் நடைபெற்ற போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.தற்போது,டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தையும் இந்தியாவின் முதல் ஒலிம்பிக் பதக்கத்தையும் வென்றுள்ளார்.
விருது:
விளையாட்டில் அவர் செய்த பங்களிப்புகளுக்காக மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது. இவருக்கு 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுகளை வழங்கியது.