இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 27.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்தன. இதில் அதிகபட்சமாக டோனி டி ஜோர்ஜி 28 ரன்களும், ஆண்டிலே 33 ரன்களும் மட்டுமே எடுத்தனர்.
இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளையும், அவேஷ் கான் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டை பறித்தனர். 117 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க வீரராக ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ருதுராஜ் கெய்க்வா 5 ரன்னில் விக்கெட்டைஇழந்தார்.
இதைத்தொடர்ந்து, ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். பின்னர் சாய் சுதர்சன், ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். சிறப்பாக விளையாடிய இருவருமே அரைசதம் விளாசினார்கள். இதில் ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்த அடுத்த சில நிமிடங்களில் 52ரன்கள் எடுத்து விக்கெட் இழந்தார்.
இறுதியாக இந்திய அணி 16 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 117 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் 55* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…