நேபாளத்தை வீழ்த்தி தங்கப்பதக்கப் போட்டியில் களமிறக்கும் இந்தியா மகளிர் அணி..!

#AsianGames2022,

இந்திய பெண்கள் கபடி அணி நேபாளத்தை வீழ்த்தி நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இரண்டு முறை முன்னாள் சாம்பியனான இந்திய மகளிர் கபடி அணி வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி இன்று நடந்த அரையிறுதியில் நேபாளத்தை தோற்கடித்து ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ரிது நேகியின் தலைமையில் இந்திய அணி அபாரமாக விளையாடி 61-17 என்ற புள்ளிக்கணக்கில் நேபாளத்தை வீழ்த்தியது. இடைவேளையின் போது இந்திய அணி 29-10 என முன்னிலையில் இருந்தது. ஆட்டம் மீண்டும் தொடங்கியபோது, ​​இந்தியா ஆல்ரவுண்ட் திறனை வெளிப்படுத்தி 61-17 என்ற புள்ளி கணக்கில் வென்றது. இந்தியா 9 போனஸ் புள்ளிகளைப் பெற்றனர்.

இரண்டாவது அரையிறுதியில் சீனா 35-24 என்ற கணக்கில் ஈரானை வீழ்த்தியது.  நாளை இந்தியா தங்கப்பதக்கத்திற்கான போட்டியில் சீனாவை எதிர்கொள்கிறது. இந்திய மகளிர் கபடி அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தியா 56-23 என தென் கொரியாவை வீழ்த்தியது. இந்தியா 54-22 என்ற கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது.இந்தியா 61-17 என்ற கணக்கில் நேபாளத்தை வீழ்த்தியது.

இதுவரை நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 21 தங்கம் உட்பட 87 பதக்கங்களை வென்றுள்ளது. முன்னதாக, 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 70 பதக்கங்களை வென்றதே ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த சாதனையாக இருந்தது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா மகளிர் கபடி அணி  2010,  2014 , 2018 ஆகிய மூன்று ஆண்டுகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரலாற்று வெற்றிக்குப் பிறகு, இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) ட்விட்டரில் ‘இந்திய பெண்கள் கபடி அணி நேபாளத்திற்கு எதிராக 61-17 என்ற அபாரமான ஸ்கோருடன் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு ஒரு வெள்ளிப் பதக்கமாவது உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். இன்று இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதியில்  பங்களாதேஷை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்